“சச்சின், சேவாக், ஹிட்மன் ரோஹித் சர்மா தொடங்கி இசான் கிஷன் & சுப்மன் கில் வரை: ஒருநாள் கிரிக்கெட்டின் 200 ரன்கள் சாதனையின் கதை!”

Author:

கடந்த காலங்களில் ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் 200 ரன்கள் அடிப்பது அணைத்து ஜாம்பாவான் வீரர்களின் கனவாக இருந்தது.
ஒருநாள் போட்டிகளில் 200+ ரன்கள் அடிப்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது வீரர்களின் திறமைக்கு மட்டுமல்ல, அவர்களின் மனோதிடத்திற்கும், துடிப்புக்கும், கிரிக்கெட்டில் உள்ள புதிய யுகத்தின் வளர்ச்சிக்கும் ஒரு உண்மையான அடையாளமாக இருந்தது.

சயீத் அன்வர் (1997)

1997ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 146 பந்துகளில் 194 ரன்கள் அடித்தது தான் நீண்ட நாள் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன் என்ற சாதனையாக இருந்தது. அந்த நேரத்தில் T20 கிரிக்கெட் இல்லை, பவர் ப்ளே இல்லை, அப்படி ஒரு காலத்தில் இது ஒரு அதிசயமாகவே கருதப்பட்டது.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல் – சச்சின் டெண்டுல்கர் (2010)

இந்த சாதனையை இந்தியாவின் Master Blaster சச்சின் டெண்டுல்கர் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் முறியடித்தார். உலக அரங்கில் தனிநபராக முதல் முறையாக 200 ரன்கள் அடித்த வீரர் என்ற தலைசிறந்த சாதனை செய்தார். அப்போது கிரிக்கெட் ரசிகர்கள், “ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் 200 ரன்கள் அடிப்பது ஒருபோதும் நடக்குமா?” என்று சந்தேகப்பட்ட காலம். ஆனால், சச்சின் அந்த சந்தேகத்திற்கு முடிவாக விளையாடினார்! சச்சின் 200 ரன்களை அடிக்கும் போது, கிரிக்கெட் உலகம் முழுவதும் வானவேடிக்கையாக கொண்டாடியது. தென்னாப்பிரிக்க வீரர்கள் கூட அவரை கைதட்டிப் பாராட்டினார்கள்.

வீரேந்திர சேவாக் (2011)

இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், “நான் 200 அடிக்கப் போகிறேன்” என்று சொன்னதுபோல் பந்து வீச்சாளர்களை இரக்கமின்றி தாக்கினார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்தார். இதில் 25 fours மற்றும் 7 sixes அடங்கும்.ஒருநாள் போட்டியில் தனி நபர் அதிகபட்ச ரன்களாக அப்போது இது பதிவானது.

Hitman- ரோஹித் சர்மா (2013, 2014, 2017)

இதற்கு அடுத்த படியாக இந்திய அணியின் Hitman என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 158 பந்துகளில் 209 ரன்களை எடுத்து ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார். மேலும், 2014 நவம்பர் 13 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்தார், இது இன்று வரை தனிநபர் ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் என்ற உலக சாதனையாக உள்ளது. இதில் 33 fours மற்றும் 9 sixes அடங்கும். மேலும் அனைத்து கிரிக்கெட் உலகமும் ஆச்சரியப்படும் வகையில் 2017ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு எதிராக 208 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு மற்றும் மூன்று முறை 200 ரன்களுக்கு அடித்த ஒரே வீரர் என்ற இமாலய உலக சாதனையை பதிவு செய்தார்.

கிரிஸ் கெயில் & மார்டின் கப்டில்

அதன் பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிஸ் கெயில் 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 147 பந்துகளில் 215 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் 200+ ரன்கள் அடித்த முதல் மேற்கிந்திய தீவுகள் வீரராகவும், உலகக் கோப்பையில் 200+ ரன்கள் அடித்த முதல் வீரராகவும் சாதனை படைத்தார். இதில் 10 fours மற்றும் 16 sixes அடங்கும்.

பின் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 163 பந்துகளில் 237* ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது அதிக பட்ச ஸ்கோர் ஆகவும் இது உள்ளது,இதில் 24 fours மற்றும் 11 sixes அடங்கும்

இசான் கிஷன் & சுப்மன் கில்

இந்தியாவின் இசான் கிஷன் 2022ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக 126 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் அடித்த இளைய வீரர் மற்றும் அதிவேகமாக 200 ரன்கள் அடித்த வீரர் என்ற என்ற சாதனையை படைத்தார். இதில் 24 fours மற்றும் 10 sixes அடங்கும்.

சமீபத்தில், 2023ல் இந்தியாவின் சுப்மன் கில் நியூசிலாந்திற்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்து 200+ ரன்கள் எடுத்த 5வது இந்திய வீரர் ஆனார். சுப்மன் கில் கிரிக்கெட்டில் ‘Next Big Thing’ என்று கருதப்படுகிறார், இதனால் அவருடைய சாதனை இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான் 2018ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 156 பந்துகளில் 210* ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில் 200+ ரன்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதில் 24 fours மற்றும் 5 sixes அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *