நம்பர் 4 இடத்தின் தேடல்: ஷ்ரேயாஸ் ஐயரன் எழுச்சி !!!

Author:

“உலகக் கோப்பை வரும் போது, நான்காம் வரிசையில் ஆடும் ஒரு சரியான வீரரை கண்டுபிடிப்பதே நமது இலக்கு. அதற்காக நாங்கள் பல சோதனைகளை மேற்கொண்டோம்.

2017-ல், அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதைக் கூறியபோது, யுவ்ராஜ் சிங்ற்கு அடுத்த படியாக நம்பர் 4 இடத்தில் ஒருவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று அனைவருக்கும் புரிந்திருக்க வேண்டும். பல வீரர்களை சோதித்த பிறகு, இறுதியில் ராயுடுவை தேர்வு செய்தோம்.

ஆனால் உலகக் கோப்பை வரும் போது அதிலும் மாற்றம் வந்ததன் விளைவை நாம் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் அனுபவித்தோம்.

பல வீரர்களை சோதித்த காலத்தில், 2017-ல் ஒரு சிறந்த வீரரின் அறிமுகமும் நடந்தது. விராட் கோலி இல்லாத நிலையில் இலங்கைக்கு எதிரான 3 மேட்ச் ஒருநாள் தொடரில் நம்பர் 3 இடத்தில் இறங்கிய அந்த வீரரின் ஸ்கோர் தொடர் முடிவடையும் போது, 54 சராசரியிலும், 102 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 2 அரைசதங்கள் உட்பட 162 ரன்களாக இருந்தது. விராட் கோலி திரும்பி வந்த பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த ஒருநாள் தொடரில் 5ம் இடத்தில் இறங்கி ஒரு திடமான 30 ரன்களை எடுத்தார்.

முதல் 6 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, 44 சராசரியும், 94 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்ட அந்த வீரரை, பின்னர் ஏன் என்று தெரியாமல் இந்திய அணி கருத்தில் கொள்ளவில்லை. மீண்டும் 2019 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உலகக் கோப்பைக்குப் பிறகு 2019-ல் நடந்த 6 ஒருநாள் போட்டிகளில், அவரது புள்ளிவிவரங்கள் 4 அரைசதங்களுடன், 53 சராசரியிலும், 113 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 266 ரன்களாக இருந்தது!!!

ஷ்ரேயாஸ் ஐயர் என்ற அந்த வீரர் 2019 உலகக் கோப்பை அணியில் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், ரஹானே, ராயுடு, ஷங்கர் உள்ளிட்ட பலரை சோதித்த இந்திய மிடில் ஆர்டரில், ஐயர் அப்போதே ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

“அதற்குப் பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வந்தார். 2024ம் ஆண்டு முடிந்த IPL போட்டிகளில், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. அதுபோல 2023-24 ரஞ்சி டிரோபி போட்டிகளில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடர்களில் ஷ்ரேயாஸ் ஐயரின் பங்கு மிக முக்கியமானது. இந்த வெற்றிகள் அவரின் திறமையை மேலும் வலுப்படுத்தின.”

4 வருடங்களுக்குப் பிறகு, 2023 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது, இதில் ஷ்ரேயாஸ் ஐயர்ன் பங்கு மிக முக்கியமானது, நம்பர் 4 இடத்தில் இறங்கி, 113 ஸ்ட்ரைக் ரேட்டில் 530 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸின் விரைவான அவுட் ஆனதுதான் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.

அதன் பிறகு நடந்த சில விரும்பத்தகாத காரணங்களினால் இந்திய அணியின் காண்ட்ராக்ட் வரை இழந்த ஷ்ரேயஸ் ஐயர் , மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து , ஒரு ICC ன் Champions Trophy போட்டிகளில் சிறந்த்து விலையை தன்னை ஒரு வலுவான மிடில் ஆர்டர் பேட்டராக ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
யுவ்ராஜ் காலத்திற்குப் பிறகு நம்பர் 4 இடத்தில் சரியான மாற்றும் நிலையான வீரர் இல்லாத நிலையில், ஐயர் அந்த இடத்தை தனது சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். இனி மீதமுள்ளது இறுதிப் போட்டிதான். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது தோல்வியை இந்த இறுதிப் போட்டியில் மீறி விடலாம் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கும் ஐயருக்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *