இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் விராட் கோலி, நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவரது அபார பேட்டிங் திறமை, ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் புதிய சாதனைகளை படைக்கும் திறன் அவரை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளச் செய்துள்ளது.

விராட் கோலியின் உலக சாதனைகள்:
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகள் உள்ளன. அவற்றில் சில இங்கே:
1. ஒரு தொடரில் அதிக ரன்கள் (765): ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை விராட் கோலி வசம் உள்ளது.
2. வேகமாக 13,000 ரன்கள் (267 இன்னிங்ஸ்கள்): ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையும் கோலி படைத்துள்ளார்
3. அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகள் (7): டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர்விராட் கோலி.
4. அதிக அரை சதங்கள் (39): டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் கோலியின் வசம் உள்ளது.
5. வேகமாக 3,500 ரன்கள் (96 இன்னிங்ஸ்கள்): டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.
6. அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகள் (21): டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் சேர்த்து அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர் என்ற உலக சாதனையும் விராட் கோலி வசம் உள்ளது.
7. ஒரு வருடத்தில் அதிக சதங்கள் (11): டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் சேர்த்து ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
8. அதிக அரை சதங்கள் (223): டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் சேர்த்து அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
9. அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகள் (11): ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றவர் என்ற சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
10. அதிக அரை சதங்கள் (123): ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற என்ற சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.