கிரிக்கெட் உலகமெங்கிலும் ரசிகர்களை கொண்டுள்ள ஒரு விளையாட்டு.இதில் நம்பமுடியாத பல சாதனைகள் இன்றுவரை படைக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய வீரர்களின் சாதனைகள் பல அவர்கள் ஒய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இன்று வர முறியடிக்கமுடியாமல் உள்ளது என்பது இந்த இரு வீரர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது
இந்த கட்டுரையில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய இரண்டு தலை சிறந்த வீரர்களின் சில அற்புதமான சாதனைகளை நாம் ஆராய்வோம்.

சச்சின் டெண்டுல்கர்: சாதனைகளின் மாஸ்டர் பிளாஸ்டர்
அனைத்து காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது ஓய்வுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். சச்சின் தெண்டுல்கரின் முக்கிய சில சாதனைகள்.
அதிக சர்வதேச ரன்கள்
டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள் (ODI) மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் (T20I) ஆகியவற்றில் அனைத்தையும் சேர்த்து 34,357 ரன்கள் ஏடுத்துள்ளார், இது உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய சாதனையாகும்.
அதிக சர்வதேச சதங்கள்
டெண்டுல்கர் 51 டெஸ்ட் சதங்கள் மற்றும் 49 ODI சதங்கள் உட்பட சர்வதேச போட்டிகளில் இதுவரை 100 சத்தங்கள் அத்திட்டுள்ளார் இது மேலும் ஒரு மிக முக்கிய உலக சாதனையாகும்.மேலும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் ஆவார்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (200 போட்டிகள்) என்ற உலகசாதனை சச்சின் வசமே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இது அவரது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையையும், சிறப்பான திறமையையும் காட்டுகிறது
ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சத்தம் அடித்த முதல் வீரன் என்ற சாதனையும் சச்சின் வசமே உள்ளது
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள்
உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளது. அவர் ஆறு உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி 2,278 ரன்களை குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்
ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு. அவர் 62 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்த சாதனை அவரது திறமைக்கும், போட்டிகளில் அவர் ஆதிக்கம் செலுத்தியதற்கும் சான்றாகும்
ஒருநாள் போட்டிகளில் அதிகதொடர் நாயகன் விருதுகள்
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 15 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இது அவரது நிலையான மற்றும் சிறந்த ஆட்டத்திற்க்கான சான்றாகும்.
முத்தையா முரளிதரன்: சுழலின் சூறாவளி
பந்தை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். எந்த பிட்சாக இருந்தாலும் பந்தை சுழல வைத்து எதிரணியை மிரள வைக்கும் திறமை பெற்றவர். இதனால், உலக கிரிக்கெட் அரங்கில் எதிரணிகள் அஞ்சும் பந்து வீச்சாளராக முரளிதரன் திகழ்ந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரன் வீழ்த்திய 800 விக்கெட்டுகள், இன்று வரை எவராலும் நெருங்க முடியாத ஒரு சாதனையாகும். அவர் ஓய்வு பெற்றாலும், இந்த சாதனை கிரிக்கெட் உலகில் இன்றுவரை நிலைத்து நிற்கிறது
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த வடிவத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார் முரளிதரன். இரண்டு வடிவங்களிலும் அவரது திறமை, கிரிக்கெட்டில் அவரது பன்முகத்தன்மையையும் துல்லியத்தையும் எடுத்துரைக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட்
ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 67 முறை இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை பத்து விக்கெட்
ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்துவது அரிதான நிகழ்வு. ஆனால், முரளிதரன் தனது அபார திறமையால், 22 முறை இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இது, ஒரு போட்டியில் அவரது ஆதிக்கத்தை பறைசாற்றுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவங்களிலும் சேர்த்து, முரளிதரன் 1,347 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையாகும்.