ரோஹித் சர்மா: 99 முதல் 264 வரை – ஒரு சாதனைப் பயணம்

Author:

ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட அதிரடி ஆட்டக்காரர். மைதானத்தில் அவர் பேட்டை சுழற்றும் விதம், பந்துகள் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் சிதறி ஓடும் காட்சி, ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். சாதனைகளைத் தனது காலடியில் போட்டு மிதித்து, புதிய உச்சங்களைத் தொடும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் பிரமிக்க வைக்கிறது.

ரோஹித் ஷர்மாவின் முக்கியமான 10 உலக சாதனைகள்

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் (264): ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனி ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை ரோஹித் சர்மா வசம் உள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் 3 முறை தனி நபராக 200க்கும் அதிகமான ரன்கள் அடித்த வீரர் ரோஹித் சர்மா மட்டுமே ஆகும்

ஒருநாள் தொடர் ஒன்றில் ஐந்து சதங்கள் விளாசி தொடரில் அதிக சத்தம் அடித்தவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்

ஒரு இன்னிங்ஸில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலமாகவே அதிக ரன்கள் எடுத்தவர் 186 ரன்கள் என்ற சாதனையும் ரோஹித் சர்மா வசமே உள்ளது.

அதிக போட்டிகளில் விளையாடியவர் (159): டி20 போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை ரோஹித் சர்மாவுக்கு உண்டு

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரரும் இவரே, இதுவரை 4231 ரன்கள் அடித்துள்ளார்

அதிக சதங்கள் (5): டி20 போட்டிகளிலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனை ரோஹித் சர்மா வசம் உள்ளது

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதுவரை T-20 போட்டிகளில் மட்டும் 205 சிக்ஸர்கள் விலகியுள்ளார்

ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச கூட்டணி (190):* ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச கூட்டணி அமைத்த வீரர் என்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனை ரோஹித் சர்மா வசம் உள்ளது. இதுவரை அவர் 631 சிக்ஸர்கள் விலகியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *